Saturday, September 22, 2007

சரத்குமார் = Common sense

நடிகர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்(!) சரத்குமார் நேற்று ஒரு பேட்டியில் முதல்வர் கருணாநிதி ராமரை அவதூறு பேசியதற்கு மன்னிப்பு கோர வேண்டும் அல்லது ராமரை வழிபடும் பக்தர்கள் இனி திமுக வுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று உறுதிபடக் கூற வேண்டும் என்று ஒரு சூப்பர் ஷாட் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது!

மேலும் அவர், "பல கோடி பக்தர்களின் மனதை புண்படுத்தி விட்டு, பின் அவர்களிடமே தேர்தலின்போது வாக்குக்கு கையேந்துவது சரியல்ல! மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் ராமர் குறித்து முதல்வர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களால், அவர் IPC பிரிவு 295A மற்றும் 290 வாயிலாக தண்டனை பெற வாய்ப்புள்ளது. அத்வானியுடன் ராமர் குறித்த விவாதத்திற்குத் தயார் என்று அறைகூவல் விடும் முதல்வர் முதலில் தனது பதவியை ராஜினாமா செய்தால் தான், நியாயமான விவாதம் நடைபெற வழி பிறக்கும்! நம் மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வதில் கவனம் செலுத்துவதை விடுத்து, இது போன்று உள்நோக்கத்துடனான, தேவையற்ற, பெரும்பான்மை இந்து மக்களை வேதனைக்குள்ளாக்கும் கருத்துக்களை பேசி, முதல்வர் தனது நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்." என்று சரத் மேலும் கூறியுள்ளார்.

சேது சமுத்திரத் திட்டத்திற்கு மாற்றுப்பாதை அமைக்க முடியுமானால், அது குறித்து ஆராய்வதில் தவறொன்றுமில்லை என்றும், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய அளவுகோல்களில், ராமர் சேதுவை உடைத்து அமைக்கும் கடல் பாதை தான் ஏற்றது என்ற வாதத்திற்கு வலு சேர்க்கும் கருத்துக்களை முன் வைக்க வேண்டியது அரசின் கடமை என்றும் சரத் கூறியுள்ளார்.

சரத் தனது பேட்டியில் பிஜேபியையும் ஒரு வாங்கு வாங்கியுள்ளார்! திட்டம் தொடங்கி 18 மாதங்களுக்குப் பின் அரசியல் ஆதாயத்திற்காக, பிஜேபி இப்பிரச்சினையை கையில் எடுத்திருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்! பிஜேபி விரித்த வலையில் தி.மு.க விழுந்து விட்டது என்றும், திரு.அத்வானி மற்றும் திரு.கருணாநிதி ஆகிய இருவருமே கண்டனத்துக்குரியவர்கள் என்றும் சரத் பொரிந்துள்ளார்.

தமிழர்களின் 150 ஆண்டுக் கனவான சேது சமுத்திரத் திட்டத்தின் நோக்கம் அரசியல்-மத சர்ச்சைகளினால் திசை திருப்பப்படாமல், திட்டம் சுமுகமான முறையில் நிறைவேற்றப்பட்டால், தென் மாவட்டங்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு வழி பிறக்க நல்ல வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இறுதியாக, அடுத்த மாதம் ஜூன் மாதம் பொதுத் தேர்தல் நடைபெறலாம் என்று கணித்த சரத், திமுக அரசு, இலவசத் திட்டங்கள் தவிர்த்து வேறெதையும் தனது சாதனைகளாகக் கூற இயலாத நிலையில் உள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார்!

நன்றி: டெக்கான் குரோனிக்கள்

*** 358 ***

18 மறுமொழிகள்:

said...

அப்படி என்னங்க கருணாநிதி சொல்லி விட்டார்?

அது ஒரு புறம்.உங்க கருத்தை சரத் சொல்லிட்டார்.அதை வெளிப்படையாக எழுதிடலாமே.

மஞ்ச துண்டு விஷயத்தில் கருணாநிதியை பக்திமான் என்று சொன்ன ஆட்கள் நீங்கதானே? இப்ப ஏன் கருணாநிதி மாறிட்டாரு?

போங்கய்யா

enRenRum-anbudan.BALA said...

Test comment !

said...

என் பின்னூட்டம் வரவில்லையே? உங்கள் குரு மாலன் பாணியில் கலக்கி இருக்கிறீர்கள். பின்னூட்ட டெம்பிளேட் இல்லையே? எங்க அது?

தனிபதிவு போடணுமா சொல்லுங்க

மாசிலா said...

//பல கோடி பக்தர்களின் மனதை புண்படுத்தி விட்டு//முதல்வர் கருணாநிதி ராமரை அவதூறு பேசியதற்கு மன்னிப்பு கோர வேண்டும் //

பல நூறு ஆண்டுகளாக மண்ணின் மைந்தர்களான தலித்துக்களை, ஆதிவாசிகளை துன்புறுத்தி, அழித்து, கொலைசெய்து, கற்பழித்து, வீடுகள் எரித்து, வஞ்சனைகள் செய்து விளிம்பு நிலை வாழ்க்கைக்கு தள்ளிய இந்துக்கள் இத்தலித்துக்களிடம் மன்னிப்பு கோர தயாரா?

இதையும் தலித்துக்களக்காக சரத்பாபு இந்துக்களிடம் கேட்பாரா?

எங்கே கேட்கச் சொல்லுங்கள் பார்கலாம்! அல்லது தன்னை ஒரு அக்மார்க இந்து என டமாரம் அடிக்கும் அவரே இதை செய்யச் சொல்லுங்கள்! பார்ப்போம் அவரது ஆண்மையின் அழகை!!!

said...

////மாசிலா said...
""இதையும் தலித்துக்களக்காக சரத்பாபு இந்துக்களிடம் கேட்பாரா?""///

சரத் பாபு ஏனய்யா கேக்கணும்.அவரை ஏன் வம்புக்கு வலிக்கிறாய்...உனக்கு ஏதாவது ஆப்பு ..கீப்பு வச்சுட்டாரா..இந்தப் பதிவுல சனங்க சரத் குமார் பத்தி பேசுராங்க

enRenRum-anbudan.BALA said...

'அறிவாளி' அனானி 1,
//அது ஒரு புறம்.உங்க கருத்தை சரத் சொல்லிட்டார்.அதை வெளிப்படையாக எழுதிடலாமே.

மஞ்ச துண்டு விஷயத்தில் கருணாநிதியை பக்திமான் என்று சொன்ன ஆட்கள் நீங்கதானே? இப்ப ஏன் கருணாநிதி மாறிட்டாரு?
//
என்னத்த வெளிப்படையா எழுதச் சொல்றீங்க ? சரத் பிஜேபி குறித்து சொன்னதையும் சேர்த்துத் தானே போட்டிருக்கேன்.

'மஞ்சத்துண்டு' பத்தி நான் எதுவும் எழுதின மாதிரி தெரியல, சும்மா எதையாச்சும் போட்டு சத்தாய்க்காதீங்க சாமி :)

பெரிய பதவியில் இருப்பவர் கொஞ்சம் நிதானமா இருக்கணும் / கருத்து சொல்லணும், அதான் நான் சொல்ல விரும்புவது ! ராமர் சேதுவுக்கும், ராமர் சோமபானம் குடிச்சதுக்கும் எதுக்கு வேலையற்று முடிச்சு போடணும், அதான் மேட்டர் !

அனானி 2,
//உங்கள் குரு மாலன் பாணியில் கலக்கி இருக்கிறீர்கள்.
//
மாலன் என் குருன்னு எப்படி கண்டுபிடிச்சீங்க ? ஏங்க, வேற யாரும் கிடைக்கலையா ? அதுக்கு, நம்ம சூப்பர் ஸ்டாரையே கை காட்டியிருக்கலாமே ;-)

மாசிலா,
//பல நூறு ஆண்டுகளாக மண்ணின் மைந்தர்களான தலித்துக்களை, ஆதிவாசிகளை துன்புறுத்தி, அழித்து, கொலைசெய்து, கற்பழித்து, வீடுகள் எரித்து, வஞ்சனைகள் செய்து விளிம்பு நிலை வாழ்க்கைக்கு தள்ளிய இந்துக்கள் இத்தலித்துக்களிடம் மன்னிப்பு கோர தயாரா?

இதையும் தலித்துக்களக்காக சரத்பாபு இந்துக்களிடம் கேட்பாரா?
//
கருத்துக்கு நன்றி. பல காலம் தலித்துகளை 'உயர்த்தப்பட்ட' சாதியினர் கொடுமைப்படுத்தியது மாபெரும் தவறு என்பது தான் என் கருத்தும் ! இந்த விதயத்தில், சரத்குமார் கூறிய கருத்துக்கள் நடுநிலையானவை என்று நான் கருதுகிறேன், அவ்வளவு தான்!

சரத் அதைக் கேட்பாரா, இதைக் கேட்பாரா என்றால் என் பதில், "எனக்குத் தெரியாது".

அனானி3,
தட்டச்சுப் பிழையை ஏன் பெரிசு பண்றீங்க ?

எ.அ.பாலா

சாலிசம்பர் said...

//பல காலம் தலித்துகளை 'உயர்த்தப்பட்ட' சாதியினர் கொடுமைப்படுத்தியது மாபெரும் தவறு என்பது தான் என் கருத்தும் !//

தாழ்த்தப்பட்ட என்று சொன்னால் மற்றவர்களால் தாழ்த்தப்பட்ட என்று பொருள் வரும்,அதேபோல் உயர்த்தப்பட்ட என்று சொன்னால் மற்றவர்களால் உயர்த்தப்பட்ட என்று பொருள் வருகிறது.

"உயர்த்தப்பட்ட" என்பதற்குப் பதிலாக "உயர்சாதி எனக் கருதிக் கொண்ட சாதி" என்று குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும்.

மீட்டர்பாலா said...

யோவ்,

இதத் தான் நாங்க ஏற்கன‌வே படிச்சிட்டோமே? காமன் சென்ஸ்ங்கரத ஒத்துகற‌துக்கு டைட்டில் மட்டும் போதுமா? ஜிங்சக்க எங்க காணோம்?

சதுக்க பூதம் said...

கருட புராணத்தில் கருணாநிதியின் இந்த பாவ செயலுக்கு என்ன தண்டனை?

முத்துகுமரன் said...

சீக்கிரம் இந்தியா- ஆஸ்திரேலியா அரையிறுதி போட்டி பற்றி பதிவு போடவும் :-)

enRenRum-anbudan.BALA said...

ஜாலி ஜம்பர்,
சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. தாங்கள் கூறிய அர்த்தத்தில் தான் நானும் குறிப்பிட்டேன்!

enRenRum-anbudan.BALA said...

மீட்டர் பாலா,
சரத் இந்த விஷயத்தில் சொல்லியுள்ளது முழுதும் "காமன் சென்ஸ்" தான் என்பது கண்கூடு !

சதுக்க பூதம்,
என்ன தண்டனை என்பதை சங்கர் மற்றும் சுஜாதாவிடம் கேட்டுத் தெளிவு பெறுங்கள் :)

enRenRum-anbudan.BALA said...

முத்துகுமரன்,
வாங்க ! சீக்கிரமே பதிவிடுகிறேன், இந்தப் பதிவு குறித்து கருத்து எதுவும் சொல்ல மாட்டீங்களா ? ;-)

said...

என்னதான் சிறந்த எளுத்தாளராயிருந்தாலும் கருணாநிதி ஒரு பதவி மோகம் பிடித்த பச்சை அரசியல்வாதிதான் மத்திய அரசுக்கு ஜால்ரா அடித்து பிழைப்பு நடாத்தும் ஒருவர்தான் விஜயகாந்த் கேட்டதுபோல எப்படி கண்ணகியை நம்புவது..?

enRenRum-anbudan.BALA said...

anony4,
நன்றி.

said...

//சதுக்க பூதம்,
என்ன தண்டனை என்பதை சங்கர் மற்றும் சுஜாதாவிடம் கேட்டுத் தெளிவு பெறுங்கள் :)
//

இது ;-))))))))))))))))

said...

Tharuthalai has left a new comment on your post "சரத்குமார் = Common sense":
****************************
கண்ணகி இருந்தாளா எனக் கேட்கும் கபோதிகளுக்கு,
அவள் இருந்தா என்ன இல்லாமல் போனால் என்ன? குந்தி எப்படி சூரியனுக்கு பிள்ளை பெற்றாள், கண்ணன் ஆடையை திருடியதற்கு ஆதாரம் இருக்கா என்று இங்கு கேள்வி கேட்கிறார்களா? பிரச்சனை ராமன் *** EDITED ***என்பதற்காக மக்கள் நலத் திட்டம் ஒன்று பாதிக்கப்படுகிறது. அதனாலேயே ராமனின் பிறப்பை கேள்வி கேட்க வேண்டி உள்ளது.

கண்ணகிக்காக மக்கள் நலத் திட்டம் பாதிக்கப்பட்டால் அவள் இருந்தது பற்றி கேள்வி வரும். கண்ணகி சிலையே இடிக்கவில்லைய? அதுபோல் ராமனின் சிலைகளும் இடிக்கப்பட வேண்டுமா?

-----------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணயம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.
************************
Posted by Tharuthalai to தமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா at 1:57 PM, September 24, 2007

enRenRum-anbudan.BALA said...

அதியமான்,

Thanks for sharing the info. The issue has been completely side-tracked from whether the project is commercially viable to mindless / virulent rhetoric ridiculing the religious sentiments of the SILENT MAJORITY in the guise of Rationalism and adopting "Selective" Freedom of expression !

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails